ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் பணி நடைபெறுவதால் அந்த வழிதடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.