துணிவு படத்திற்கு பிறகு, ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று அஜித் முடிவு செய்துள்ளார். இதனால், விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட அவர், மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்துள்ளார்.
விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பின்னணி பணிகள், மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகி, அஜித் ரசிகர்களை கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது, 4 தரமான கதைகளை உருவாக்கி, அதனை அஜித்திடம் மகிழ் திருமேனி கொடுத்துள்ளாராம். ஆனால், அந்த 4 கதையில், எந்த படத்தை எடுக்க வேண்டும் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லையாம்.
முடிவு செய்யப்பட்ட பிறகே, அதற்கான பணியில், அவர் இறங்குவார் என்று கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பே விரைவில் தொடங்க உள்ளது என்று கூறி வரும் நிலையில், இப்படியான தகவல் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.