விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ. 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.
மாணவிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று நடைபெற்றது. இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார்.
3அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் கல்லூரிக்கு சென்று, தேர்வு எழுதினார். அவரை, கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவியை, மணக்கோலத்தில் மணமகன் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.