சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுக்கொத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு நீடித்துக் கொண்டேன் போன நிலையில் செந்தில்குமார் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அந்தக் கோபத்தில் என்ன செய்வது என தெரியாமல் திடீரென சுவற்றில் இருந்த பல்லியை பிடித்து அடித்து தின்றதாக கூறப்படுகிறது.
பல்லியை தின்ற செந்தில்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பிறகு அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.