பள்ளி திறக்க உள்ள நிலையில் கழிவறையை சுத்தம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர்

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள மடப்புரம் ஊராட்சி களத்திடல்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் நாலுவேதபதியை சேர்ந்த ராஜேந்திரன், இவர் 24 வருடங்களாக ஆசிரியர் பணியிலுள்ள இவர்,கடந்த 9 வருடமாக தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார்.

36 மாணவ மாணவிகள் படிக்கும் இந்த ஈராசிரியர் கொண்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியரும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நாளை பள்ளி திறக்க உள்ள நிலையில் இன்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தார்.

மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறையை தாமாக முன்வந்து தூய்மை பணியாளர்கள் இல்லாமலேயே சுத்தம் செய்தார். இவரது இந்த செயலை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளோடு பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 54 வயதான இந்த தலைமை ஆசிரியரின் செயல் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News