“பாஜக-வின் மிரட்டல்களுக்கு தி.மு.க. அஞ்சாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அவரை விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை திமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

அந்த வகையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். இதையடுத்து, ட்விட்டரில் பதிவு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.

2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News