செந்தில் பாலாஜியை தாக்கிய அதிகாரிகள்..தலையில் காயம் – விசாரணையில் இறங்கிய மனித உரிமை ஆணையம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கூறியதாவது : “தன்னை இழுத்ததால் தலையில் காயம் ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சோர்வாக காணப்பட்டார். தன்னை தாக்கியதாக சில அதிகாரிகளின் பெயர்களையும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் நேரில் விசாரித்தேன் தரையில் போட்டு தரதரவென இழுத்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் நாளை முடிவெடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News