OPS-ன் MLA பதவிக்கு ஆப்பு..! EPS-ன் மாஸ்டர் ப்ளான்..!

கடந்த ராஜ்ய சபா தேர்தலுக்கு பிறகு அஇதிமுக, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக-வில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரும் மாறிமாறி தங்கள் கட்சியினரையே நீக்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டுத்தொடர் அக்டோபர்-17-ஆம் தேதி தொடங்க உள்ளது.

அதில் திமுக அரசு கொண்டு வந்த சொத்து வரி மற்றும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இபிஎஸ் தரப்பு எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்யவுள்ளதாக திட்டம் போட்டுள்ளனர்.

இதற்கு மாறாக ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏ-க்கள் கூட்டுத்தொடரில் பங்கேற்றால்,கட்சி கொறடா-வை மீறியதாக கூறி,அவர்களின் எம்எல்ஏ பதவிகளை பறிக்க, சபாநாயகரிடம் கடிதம் அளிக்க இபிஎஸ் டீம் மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News