பாதம் தாங்கி பழனிசாமி…அதிமுகவை பங்கமாய் கலாய்த்த மு.க ஸ்டாலின்

செந்தில் பாலாஜி கைதான விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் தமிழ்நாட்டில் ‘அடிமை’ பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பா.ஜ.க. ஆட்சி நடத்தியது.

அ.தி.மு.க.வின் இந்த ஊழல் பெருச்சாளிகளைத்தான் டெல்லியில் மொத்தமாகச் சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்தான் ஊழலுக்கு எதிராகத் தமிழ்நாட்டுக்கு வந்து முழங்கி விட்டுப் போயிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வைத் தங்களின் கொத்தடிமைக் கூடாரமாக ஆக்குவதற்கு பா.ஜ.க அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தியது. அவர்களும் பயந்து பா.ஜ.க.வின் காலடியில் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட ‘பாதம் தாங்கி’ பழனிசாமி, செந்தில் பாலாஜியைப் பற்றி குறை சொல்கிறார் என மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News