வரும் நாடாளுமன்ற தேர்தலில், தங்களது கூட்டணி, 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில், புதிய தமிழகம் கட்சி சார்பில், பொதுக் கூட்டம் நடைபெற்றது. மது இல்லாத தமிழகம் படைப்போம் என்று கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு தற்போது சரியில்லை என்று தெரிவித்தார். மேலும், செந்தில் பாலாஜி சிக்கிக் கொண்டால், அது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பிரச்சனை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, வரும் நாடாளுமன்ற தேர்தலில், தங்களது கூட்டணி, 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.