லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து பெரும் சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளின்போது, விஜய்-க்கு புதிய பழக்கம் ஒன்று ஒட்டிக் கொண்டதாக, தகவல் கசிந்துள்ளது.
அதாவது, விஜய் பொதுவாக கூச்ச சுபாவம் கொண்டவராம். யாரிடமும் பேசாமல், அமைதியாக அமர்ந்துக் கொள்வாராம். ஆனால், மாஸ்டர் படத்திற்கு பிறகு, தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில், கலகலப்பாக இருந்து வருகிறாராம்.
இந்த மாற்றம், செட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறதாம்.