அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இருதய துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் சமநிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்த பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில் தொடர்ந்து இருதய துடிப்பினை கண்காணிக்கும் இசிஜி பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கான சிகிச்சை முறைகளை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று காலை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,
காவேரி மருத்துவமனை தரப்பில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது
அமைச்சரின் உடல் நிலையை பொறுத்து இருதய அறுவை சிகிச்சை அல்லது ஸ்டண்ட் கருவி பொருத்துவது குறித்து முடிவெடுக்க உள்ளனர்.