தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை வழங்கினார்.
திண்டுக்கல்லில் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்து சாதனை படத்தை மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றை விஜய் பரிசாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து மேடையில் பேசிய விஜய் நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய மற்றும் நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும்.
ஓட்டுக்கு காசு கொடுக்கும் அரசியலில் போட்டியிடும் நபர் குறித்து யோசித்துப் பாருங்கள். உங்கள் அப்பா, அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் எனச் சொல்லுங்கள். இது நடந்தால் உங்கள் கல்வி முறை முழுமை அடையும் என நான் நினைக்கிறேன்.
நமது விரலை வைத்து நமது கண்ணை குத்திக்கொள்ளும் பணியை நாம் செய்து கொண்டுள்ளோம். நான் எதைச் சொல்ல வருகிறேன் என்றால் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. என தனது அரசியல் நகர்வு குறித்து பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் வருங்கால இந்தியாவை சந்திப்பதில் சந்தோஷம் என கூறினார்.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.