தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதையடுத்து மேடையில் மாணவ மாணவிகளிடம் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து அதிகம் படிக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
பெரியாரை படிக்க வேண்டும் என விஜய் கூறுவது அநாவசியம், தேவையற்றது என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில் RSS சித்தாந்தங்களை பேசாமல் பெரியார், அம்பேத்கர் குறித்து விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி Dr.செந்தில் பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.