தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்றி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையின் ஒரு சில பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், கோயம்பேடு, மதுரவாயல், எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து காற்றுடன் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர்.