மக்கள் புகார் அளித்தால் ‘ஆதிபுருஷ்’ படத்தை தடை செய்வோம் – சத்தீஸ்கர் முதல்வர் பேட்டி

பிரபாஸ் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஆதிபுருஷ்’. ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ராமாயண கேரக்டர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்கள் புண்படுத்துவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் ஆதிபுருஷ் படம் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால் அதுபற்றி அரசு யோசிக்கும் என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் மொழியும் அநாகரீகமாக உள்ளது. ‘ஆதிபுருஷ்’ படத்தில், கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளன. மக்கள் கோரிக்கை எழுப்பினால், அரசாங்கம் படத்திற்கான தடை குறித்து சிந்திக்கும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News