காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களிடம் அடாவடி வசூல் செய்தது குறித்து ராஜ் டிவியில் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களிடம் அடாவடியாக 300 முதல் 500 ரூபாய் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.
கேட்கும் பணத்தை தராவிட்டால் கர்ப்பிணிப் பெண்களை பார்க்க கூட அனுமதிக்க முடியாது என மருத்துவமனை ஊழியர்கள் மிரட்டுவதாக தெரிவிக்கின்றனர். இது பற்றிய செய்தி ராஜ் டிவியில் ஒளிபரப்பானதை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களின் உறவினர்களிடம் பணம் வசூல் செய்த ராஜலட்சுமி, சத்யா ஆகிய இருவரை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.