தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சினிமா மட்டுமின்றி, அரசியலிலும் அதீத ஆர்வம் கொண்ட இவர், அதற்கான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, பரிசுத் தொகை கொடுத்து, விஜய் கௌரவித்திருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:-
“தனது திருமணத்தில் எம்.ஜி.ஆர் கலந்துக் கொள்ள வேண்டும் என்று குடிசை பகுதிகளில் வாழ்ந்த ரசிகர் ஒருவர் எண்ணிக் கொண்டிருந்தார். இதுகுறித்து, எம்.ஜி.ஆரின் உதவியாளரிடமும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், திருமணத்திற்கு முன்தினம் தான், எம்.ஜி.ஆருக்கு அழைப்பிதழ் கிடைத்திருக்கிறது. இருப்பினும், சற்றும் யோசிக்காத எம்.ஜி.ஆர், அந்த ரசிகரின் திருமணத்தில் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தி, பரிசளித்தார்.
தற்போது, இதே வழியில் தான், தளபதி விஜயும் பயணித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் அவரும் அரசியலில் சாதிப்பார்”
இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் கே.ராஜன் பேசியிருந்தார்.