வாகன விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் கனிசமான அளவில் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, வாகனங்களை வேகமாக இயக்குவதே முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.
இதனை தடுப்பதற்கு, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவால், இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வாகனங்கள் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை மீறும் வாகன ஓட்டிகள், தானியங்கி கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.