விருத்தாசலம் அருகே, மீன்பிடி திருவிழாவில் கலந்துக் கொண்ட பொதுமக்கள், பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தொரவலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில், ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா, நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துக் கொண்டு, கெளுத்தி, விரால், கட்லா ஆகிய மீன்களை பிடித்து சென்றனர்.