செந்தில் பாலாஜியின் உடல் நிலை எப்படி இருக்கு?? மருத்துவமனை வெளியிட்ட தகவல்

பணமோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News