கடந்த ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. யோகாசனம் குறித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசியல் தலைவர்கள் யோகாசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடியும் யோகா செய்வது வழக்கம்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோகா செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் கோரக்பூரில் நடைபெற்ற யோகா நிகழ்வில் கலந்துகொண்ட அவர் நூற்றுக்கணக்கானோருடன் சேர்ந்து யோகா செய்தார். அவரால் யோகா செய்யமுடியாமல் திணறும் வீடியோ காட்சிகள் இணயத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. “பெயரில் யோகி என்று வைத்துக் கொண்டு யோகாசனம் எப்படி செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பாசாங்கு செய்கிறீர்கள், பாபா! உங்கள் கட்டுப்பாட்டில் யோகாசனம் இல்லை.” என்று விமர்சித்து உள்ளது.
யோகா செய்ய முடியாமல் திணறிய உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் – வைரல் வீடியோ #RajNewsTamil #YogiAdityanath #UttarPradesh #Yoga pic.twitter.com/T0N57WCTMy
— Raj News Tamil (@rajnewstamil) June 24, 2023