மதுரை துவரிமான் பகுதியில் சமுதாய கூடத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை போடும் நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது : பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் எல்லோரிடமும் போட்டியாக உள்ளது.
தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா சொன்னார். 2014ல் லேடியா மோடியா என ஜெயலலிதா கேட்ட போது அவருக்கே மக்கள் வாக்களித்தனர். அதுபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள்.
அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என சொல்ல முடியாது.
ஆனால் எங்களுக்கு போட்டி திமுக தான் என அவர் பேசியுள்ளார்.