போலீசாரை மது போதையில் தரக்குறைவாக பேசிய சோசியல் மீடியா பிரபலம் சூர்யா தேவி கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (வயது 28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.

இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த (21 ம்தேதி) மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, அவரது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தனது புகாரில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று பெட்ரோல் கேனுடன் காவல்நிலையத்திற்கு வந்த சூர்யாதேவி காவல்நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக்கூறி அவரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் புகாருக்கு மனு ரசீது கொடுத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு உள்பட போலீசாரை சூர்யா தேவி தரக்குறைவாக போலீஸ் நிலையம் முன்பு பேசினார்.

இது தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டு லாரான்ஸ் மேரி அளித்த புகாரின் பேர் மணப்பாறை போலீசார் சூர்யா தேவி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News