அதிமுக தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு கட்சியினர் இனிப்புகளை வழங்கி தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
கட்சியின் தலைமையிடமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மரியாதை செலுத்திய இ.பி.எஸ் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார். இதையடுத்து களமிறங்கிய ஓபிஎஸ், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் வெள்ளை புறா ஒன்றையு பறக்க விட்டார்.
இதனை இபிஎஸ்-க்கான சமாதான தூது என்று ஒரு தரப்பும், ஜெயலலிதா, ஜானகி என இருஅணியாக பிரிந்த போது ஜெ-வுக்கு சேவலும், ஜானகிக்கு இரட்டை புறாவும் வழங்கப்பட்டது. அந்த வகையில் இதனை புதிய கட்சிகான சின்னம் என மற்றொரு தரப்பும் கூறி வருகின்றனர்.
தற்போது அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் வெள்ளைப்புறாவை பறக்கவிட்டது புதிய கட்சிக்கான மறைமுக மெசேஜ் என்று அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.