தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி என்பவர், அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற திரைப்படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு, மனியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் உமாபதியும், அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யாவும், காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும், தகவல் கசிந்தது.
வழக்கம் போல் இது வதந்தியாக இருக்கும் என்றே பலரும் நம்பி வந்தனர். ஆனால், இதுகுறித்து பேட்டி ஒன்றை அளித்த தம்பி ராமையா, இந்த தகவல் உறுதி என்று தெரிவித்துள்ளார்.
“கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம்.
இதற்காக, பல்வேறு வரன்களை பார்த்து வந்தோம். ஆனால், தான் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை காதலிப்பதாக, என் மகன் கூறியிருந்தார். இதையடுத்து, அர்ஜூன் குடும்பத்தாரிடமும் இதுதொடர்பாக பேசினோம்.
அவர்களுக்கும் இந்த திருமணத்தில் முழு விருப்பம் இருப்பது தெரியவந்தது. தற்போது, ஐஸ்வர்யா தெலுங்கு மொழயில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, திருமணத்தை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்”
இவ்வாறு அந்த பேட்டியில், தம்பி ராமையா கூறியுள்ளார்.