சினிமா
புது படங்கள் எல்லாம் ஓரமாக போங்க.. நாயகன் வந்துட்டார். வேட்டையாடு விளையாடு செய்த சாதனை!
கௌதம் மேனன் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த படம் நல்ல வசூலை குவிக்குமா? குவிக்காதா? என்ற குழப்பத்துடன் தான், ஆரம்பத்தில் திரையிட்டுள்ளனர். ஆனால், அதற்கு ஆடியன்ஸ் வேற லெவலில் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
அதாவது, இந்த படத்தின் ரீ ரிலீஸ் குறித்து, கமலா திரையரங்கின் உரிமையாளர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இப்படத்தை காலை 8 மணிக்கு திரையிட்டோம்.
ஹவுஸ் ஃபுல் ஆகும் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அந்த வாரம் வெளியான 6 படங்களை விட, வேட்டையாடு விளையாடு படம் தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login