திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அபிஷேகம் செய்வதற்காக, நாட்டு மாட்டு பால் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான செலவுகள் அதிகம் ஏற்படுவதால், தேசிய இன நாட்டு மாடுகளை உற்பத்தி செய்வதற்கு திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.
இதனால், ஸ்ரீவெங்கடேஸ்வர பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், செயற்கையான முறையில் நாட்டு மாடுகளை உற்பத்தி செய்ய முடிவு செய்தனர். மேலும், 3.80 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக, நாட்டு மாடுகளை செயற்கை கருவூட்டல் மூலம், உருவாக்கியுள்ளதாக, தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலப்பினும் செய்து உருவாகியுள்ள இந்த நாட்டு மாடு கன்றுக்கு, பத்மாவதி என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் நல்ல தரமான நாட்டு பசு மாடுகளை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.