Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

கரப்பான்பூச்சி போல் கவிழ்ந்த வாகனம்.. கொடைக்கானலில் விபத்து..

தமிழகம்

கரப்பான்பூச்சி போல் கவிழ்ந்த வாகனம்.. கொடைக்கானலில் விபத்து..

கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த டெம்போ வாகனம், பாறை மீது மோதி விபத்து ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு, டெம்போ வாகனத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்தனர்.

சுற்றுலாவை முடித்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பாறையில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், வாகனத்தில் பயணித்த 8-க்கும் மேற்பட்டோர், படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top