இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ,உதயநிதி ,வடிவேலு நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் பார்வையாளர்களை பெற்றது.மேலும் இப்படத்தின் கதாபாத்திரங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கண்டிராத தோற்றத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமும், உதயநிதியின் புது சாயலும், பேரார்வத்தை உண்டுசெய்துள்ளது.

இப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் , இன்றளவும் பல எதிர்ப்புகளும் , எதிப்பார்ப்புகளும் நெட்டிசன்களிடையே வலுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியானதையடுத்து இப்படத்தின் கருவானது இப்படி இருக்கலாமோ என்று திரை விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மாரிசெல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிகரமான திரைப்படம் என்றும் ,இயக்குநர் மாரியை அனைத்துக்கொள்வதாகவும் , வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி மிகவும் எதார்த்தமான நடிப்பை தந்துள்ளதாகவும் ஃபகத் கீர்த்தி சுரேஷ் தங்களின் சிறந்த உழைப்பை கொடுத்துளதாகவும் ரஹ்மான் சார் அழகான இசையை வழங்கியுள்ளார் என்றும் பதிவிட்டுள்ளார் . இப்பதிவினை தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .