அஜித், விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை அசீன். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர், தனது மகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை அசீனுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும், தகவல் பரவி வந்தது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், கணவர் உடனான இன்ஸ்டா பதிவுகளையும் அவர் நீக்கியதாக கூறப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, இந்த தகவல் குறித்து நடிகை அசீன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நானும் என் கணவரும் பிரிய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதனால், நாங்கள் இருவரும் மிகுந்த வருத்தம் அடைந்தோம். ஆனால், இந்த தகவலில் துளியும் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த பதிவு, வைரலாக பரவி வருகிறது.