ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில், 6 தங்கப் பதக்கங்களை பெற்று, தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நோபாளம் நாட்டின் தலைநகர் காட்மாண்டு பகுதியில், கடந்த மாதம் ஆசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கராத்தே வீரர்-வீராங்கனைகள், இந்த போட்டியில் கலந்துக் கொண்டனர்.
தமிழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த கராத்தே குழு, பங்கேற்றிருந்தது. இந்த போட்டியின் இறுதியில், அந்த கராத்தே குழுவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள், ஆறு தங்கப் பதக்கத்தையும், 4 வெள்ளிப் பதக்கத்தையும், 6 வென்கல பதக்கத்தையும் வென்று, சாதனை படைத்தனர்.
குறிப்பாக, 10 வயது சிறுவன், தன்னை விட சீனியர் வீரர்களிடம் மோதி, வெற்றி பெற்றுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.