மருத்துவமனை இல்ல.. 50 கி.மீ போகணும்.. ஆனா இப்ப.. ஊராட்சி மன்ற தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்..

கள்ளக்குறிச்சி அருகே, தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கல்வராயன்மலை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மருத்துவமனை இல்லாததால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால், 50 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

மேலும், இவ்வளவு தூரத்தை கடப்பதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா, தனது சொந்த செலவில், ரூபாய் 18 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வாங்கிக் கொடுத்துள்ளார்.

அவசர காலங்களில் இந்த வாகனத்தை, பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அரசின் திட்டங்களையே சரியாக செயல்படுத்தாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில், தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் செயல், அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.

RELATED ARTICLES

Recent News