உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, வடிவேலு ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம், பல்வேறு தரப்பினரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த வடிவேலுவின் கதாபாத்திரம், முன்னாள் சபாநாயகர் தனபாலை மையமாக வைத்து, உருவாகியுள்ளதாக, இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள தனபால், மாமன்னன் திரைப்படம் என்னுடைய சாயலில் வெளியாகியிருந்தால், அது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தனபால் தான் உண்மையான மாமன்னன்-ஆ என்று மாரி செல்வராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “இதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.
திமுக -வை சேர்ந்த உதயநிதியை வைத்து, அதிமுக-வின் முக்கிய நிர்வாகியின் கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் பலரும், கார சாரமாக விவாதித்து வருகின்றனர்.