சினிமா
மீண்டும் வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் அமீர் !
தமிழ் திரையுலகில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் வெற்றிமாறன். இவர் பல வெற்றி படங்களை தந்துகொண்டிருக்கிறார். தற்போது விடுதலை 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிற நிலையில் ,வாடிவாசலின் பிரிபொடக்ஷன் பணிகளும் தொடர்ந்துவருகிறது.
இப்படத்தை எதிர்நோக்கி சூர்யா ,வெற்றிமாறன் ரசிகர்கள் காத்திருக்கும்நிலையில் வடசென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் அமீர் ,ராஜன் என்ற கதாபாத்திரத்திரத்தை பெருமளவு பேசவைத்தார்.
இதனால், வாடிவாசல் திரைப்படத்தில் மீண்டும் அமீர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இச்செய்தியை அமீர் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login