அண்ணாமலையார் கோவிலுக்கு சென்ற அண்ணாத்த!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், நடிகர் ரஜினிகாந்த், சாமி தரிசனம் செய்தார்.

3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, இப்படத்தின் படப்பிடிப்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கி, கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

RELATED ARTICLES

Recent News