கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் 51 பேர் பலியாகினர். 32 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.