சிரஞ்சீவியின் தம்பியும், பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், ஆந்திர அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். ஆனால், இவர் பாஜகவின் B TEAM என்றும், மற்ற கட்சியினரிடம் இருந்து பணத்தை பெற்று தான், தனது ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார் என்றும், YSR காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில், தொண்டர்களிடம் பவன் கல்யாண் உரையாற்றினார். அப்போது, பணம் வாங்கிக் கொண்டு கட்சி நடத்துகிறேன் என்று கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும், YSR காங்கிரஸ் கட்சியினர் கையால் ஆகாதவர்கள் என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர், செருப்பால் அடிப்பேன் என்று கூறியிருப்பது, ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.