ஒரு கிலோ தக்காளி ரூ.140 விற்பனையாவதால் பொது மக்கள் அதிர்ச்சி: அமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் தக்காளி விலை ரூ.140-ஐ எட்டியுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தக்காளி வரத்து குறைவால், மக்கள் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் தக்காளி விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்கப்படுகிறது.

இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

RELATED ARTICLES

Recent News