மலைப்பாம்புகள் என்றாலே, பொதுமக்கள் இடையே ஒரு மலைப்பு இருப்பது சாதாரணம் தான். காரணம் என்னவென்றால், இந்த வகையான பாம்புகளிடம் விஷம் இல்லையென்றாலும், தனது உடும்பு பிடியை வைத்து, இரையை வேட்டையாடி உண்ணும் பழக்கம் உடையது.
இவ்வாறு உள்ள இந்த மலைப்பாம்புகள், சில சமயங்களில் பெரிய முதலைகளையே கூட விழுங்கும் திறன் உடையவையாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், சில அபூர்வ ரக மலைப்பாம்புகள், வளர்ந்த மனிதனையே விழுங்கும் சக்தி கொண்டவையாக உள்ளன.
இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாமரசேரியில் உள்ள கூடதை பகுதியிலும், மலைப்பாம்பு ஒன்று, பொதுமக்களை மலைக்க வைத்துள்ளது. அதாவது, அப்பகுதியில் உள்ள வனப்பகுதி ஒன்றில், நரி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.
அப்போது, அங்கு வந்த ராட்சத மலைப்பாம்பு, அந்த நரியை பிடித்து, உடலை இறுக்கி, விழுங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்க்கும்போது, ஒவ்வொரு நொடியும், மிகவும் த்ரில்லாகவே உள்ளது என்று கருத்து கூறி வருகின்றனர்.