விஜய்-உடன் போட்டிபோடும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு பல்வேறு முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து வருகிறார். அந்த வகையில் H.வினோத்தும் கமலும் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது கமல் – H.வினோத் இணையும் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதே தொகைக்கு விஜயின் லியோ படத்தையும் இந்நிறுவனம் வாங்கியிருப்பதாக தெரிகிறது.

இதனால் விஜய்க்கு போட்டியாக கமலும் இறங்கிவிட்டார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News