சினிமா
இதுவரை இல்லாத வசூல்! அதிரடி காட்டும் மாமன்னன்!
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய 2 வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தற்போது மாமன்னன் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையே பெற்ற இந்த திரைப்படம், தோல்வி அடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் மட்டும், இப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான உதயநிதியின் படங்களிலேயே, இந்த படம் தான் அதிக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login