ஒரு மதுபாட்டில் வாங்கினால் இன்னொரு மது பாட்டில் இலவசம் என்றும் பெண்களுக்கு இலவச மது என புதுச்சேரியில் மது விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் துணை ஆணையர் அலுவலகம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் தங்களது மதுபான கடைகளில் உணவகங்களில் அல்லது விடுதிகளில் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அறிவிக்கக்கூடாது.
விதிமுறைகள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரித்துள்ளனர்.