சமையல் கேஸ் சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்க சத்தீஸ்கர் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் 500 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை ஆகி வரும் நிலையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறிய போது சமையல் கேஸ் 500 ரூபாய்க்கு கொடுப்பது குறித்து ஆலோசனை நடந்து கொண்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து முடிவு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.