ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அரசு வேலைகளிலிருந்து பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அழகு நிலையங்களை மூட தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 மாதங்களாக, ஆப்கனிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை முடக்கப்பட்டு வருவதாக ஐநா மனித உரிமைப் பிரிவின் துணை உயர் ஆணையர் நாடா அல் நஷீப் கூறியுள்ளார்.