பொது சிவில் சட்டம்: அதிமுக எதிர்ப்பு!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் முடிவுக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலே பொது சிவில் சட்டம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம்’ என்று கூறினார்.

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என 2019 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News