திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் வயது 24. கொத்தனார் வேலை பார்த்துவரும் இவர் பல நாட்களாக
பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர், கடந்த வாரம் அச்சிறுமியை வீட்டிலிருந்து இவர் கடத்தி சென்றதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . பின்னர் , அருண்குமாரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர் காவல் துறையினர்.