மது அருந்தும் போது தகராறு.. நண்பனை கொலை செய்த நண்பர்கள்.. 6 மாதங்களுக்கு பிறகு வெளியான உண்மை..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீமான். 22 வயதாகும் இவர் மீது, காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அன்று, வீட்டில் இருந்து வெளியே வந்த சீமான், திடீரென காணாமல் போயுள்ளார். இதனால், பதற்றம் அடைந்த பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். 6 மாதங்கள் வரை நடந்து வந்த இந்த விசாரணை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது, சீமானும், அவரது நண்பர்களும், சம்பவத்தன்று மது அருந்த சென்றுள்ளனர். அப்போது, அவர்களுக்கு உள்ளே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சீமானை அவரது நண்பர்கள் கொலை செய்துள்ளனர்.

பின்னர், அந்த உடல் கிணற்றில் வீசியுள்ளனர். தற்போது, கிணற்றில் இருந்து சீமானின் எலும்புகளை மீட்ட காவல்துறையினர், வழக்கில் தொடர்புடைய 4 பேரை விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News