மத்தியப் பிரதேசத்தில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வரவழைக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் பிரவேஷ் சுக்லாவின் கால்களை கழுவி, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் சிவராஜ் சிங் சௌஹான்.
சித்தி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா் மீது பிரவேஷ் சுக்லா என்ற நபா் சிறுநீா் கழித்த சம்பவம் குறித்த விடியோ சமூக ஊடகங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாகப் பரவியது.
இது மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் கவனத்துக்குச் சென்ற நிலையில், இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, குற்றவாளி பிரவேஷ் சுக்லா மாநிலத்தை ஆளும் பாஜகவைச் சோ்ந்தவா் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் என குற்றம்சாட்டியது. இது குறித்து செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வரிடம் கேள்வியெழுப்பட்டது.
அதற்கு பதிலளித்த முதல்வா், ‘குற்றவாளிக்கு மதம், ஜாதி, கட்சி போன்ற பாகுபாடு கிடையாது. கட்சியைச் சோ்ந்தவா் என்பதற்காக அவா் கைது நடவடிக்கையிலிருந்து காப்பாற்றப்பட மாட்டார்’ என்றார்.
இதைத் தொடா்ந்து முதல்வா் செளஹான் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.