சென்னை: கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்தவும், நலத்திட்டப் பணிகளை கண்காணிக்கவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பு அமைச்சர்கள் உள்ளனர். இதன்படி, கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.